ரவி மோகனின் “ஜீனி” படத்தின் முதல் பாடல் அப்டேட்

ரவி மோகன், கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கும் ‘ஜீனி’ படத்தின் முதல் பாடல் நாளை இரவு 8.10 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரவி மோகன். 'ஜெயம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார். இவரது நடிப்பில் வெளியான 'பொன்னியின் செல்வன்' ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
ரவி மோகன் நடிப்பில் ஐசரி கே.கணேசன் தயாரித்துள்ள ‘ஜீனி’ திரைப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேசனல் நிறுவனம் சார்பில், அறிமுக இயக்குனர் புவனேஷ் அர்ஜுன் இயக்கியுள்ளார். இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் வாமிகா கேபி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு, ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் வெளிநாடுகளில் நடைபெற்றது. இப்படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்நிலையில், ‘ஜீனி’ படத்தின் முதல் பாடல் நாளை இரவு 8.10 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.






