தாய்லாந்தில் ஜெயராமும் நானும் பிச்சை எடுத்து 100 ரூபாய் சம்பாதித்தோம் - நடிகை பாவனா

‘ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற தாய்லாந்தில் நகைச்சுவைக்காக தானும், ஜெயராமும் பிச்சை எடுத்ததாக நடிகை பாவனா கூறியுள்ளார்
தாய்லாந்தில் ஜெயராமும் நானும் பிச்சை எடுத்து 100 ரூபாய் சம்பாதித்தோம் - நடிகை பாவனா
Published on

மலையாள திரையுலகின் முன்னனி நடிகையான பாவனா, 2006-ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளியான 'சித்திரம் பேசுதடி' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பின்னர் வெயில், தீபாவளி, வாழ்த்துகள்,கூடல் நகர், ஜெயம் கொண்டான், அசல் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மலையாளத்திலும் ஏராளமான படங்கள் நடித்து முன்னணி நடிகையாக திகழ்கிறார். இவர் கடந்த 2018-ம் ஆண்டு நவீன் என்ற தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டார். இவர் திருமணத்துக்கு பிறகும் பிசியாக நடித்து வருகிறார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு திரை உலகில் பிரபல நடிகையான பாவனா அவர் நடித்த ஒரு படத்தின் படப்பிடிப்பின் போது தனக்கு ஏற்பட்ட சுவாரசியமான அனுபவம் குறித்து கூறியதாவது:- நானும் ஜெயராமும் நடித்த ‘ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ்’ படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடந்து கொண்டிருந்தது. படத்தில் ஜெயராமுடன் நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நகைச்சுவை உணர்வு அதிகம் உள்ள நடிகர்களில் ஜெயராமும் ஒருவர். தாய்லாந்தில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது கிடைத்த ஓய்வு நேரத்தில் நகைச்சுவைக்காக பிச்சை எடுக்க திட்டமிட்டோம். அங்கு ஒரு இடத்தில் இருவரும் தரையில் அமர்ந்து கண்ணில் பட்ட ஒன்றை எடுத்து வாசித்தோம் நாம் பிறந்தநாள் முதல் என்பது போன்ற பாடல்களை பாடினோம்.

முதலில் அந்த பாடல் சுவாரசியமாக இல்லை. சிறிது நேரம் கழித்து நான் நடனமாடுவேன். ஜெயராம் பாடல் பாடுவார். அடுத்ததாக ஜெயராம் நடனமாடுவார். இப்படியே நாங்கள் செய்து கொண்டி ருந்த போது அங்கு சென்று கொண்டிருந்தவர்கள் கையில் இருந்த பணத்தை வைத்து விட்டு சென்றனர். அதற்குள் “ஷார்ட் ரெடியாகிவிட்டது. எங்களால் 100 ரூபாய் மட்டுமே சம்பாதிக்க முடிந்தது. அந்த நூறு ரூபாயை எல்லோரிடமும் காட்டி இது எங்கள் கடின உழைப்பால் சம்பா தித்த பணம் என்று சொன்னோம். நாங்கள் தரையில் அமர்ந்து கெஞ்சி பிச்சை எடுத்துக் கொண்டிருந்த காட்சிகளை வீடியோவாக எடுத்து படத்தின் இறுதி காட்சியில் சேர்த்தனர். இவ்வாறு பாவனா கலகலப்பான தனது அனுபவத்தை கூறினார்.

பாவனாவின் நகைச்சுவையான பேட்டி வைரலாகி வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com