மீண்டும் திரையுலகில் களமிறங்கிய ஜானி மாஸ்டர்


மீண்டும் திரையுலகில் களமிறங்கிய ஜானி மாஸ்டர்
x

நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் 'ஜடாரா' என்ற தெலுங்கு படத்திற்கு நடனம் அமைத்து வருகிறார்.

தென்னிந்திய திரை உலகில் பிரபல நடன இயக்குனராக இருப்பவர் ஜானி. கடந்த வருடம் பாலியல் வழக்கு ஒன்றில் சிக்கி சிறைக்கு சென்றார். நடன கலைஞரான இளம் பெண் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் சிறை தண்டனை பெற்ற ஜானி தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். பாலியல் புகார் காரணமாக ஜானி தொழில் ரீதியாக கடினமான சூழ்நிலைகளை சந்தித்தார்.

கடந்த சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் புதிய படங்களுக்கு ஜானிநடனம் அமைக்க தொடங்கி இருக்கிறார். தெலுங்கு, கன்னடம், இந்தி படங்களுக்கு நடனம் அமைக்க தொடங்கி இருக்கும் ஜானி மாஸ்டர் ஜடாரா என்ற தெலுங்கு படத்திற்கு நடனம் அமைத்து வருகிறார்.

படத்தில் கதாநாயகியான ஸ்ரீ லீலாவுக்கும் கதாநாயகனான ரவி தேஜாவுக்கும் நடன பயிற்சி கொடுக்கும் புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.

1 More update

Next Story