அவரது இசையை கேட்டாலே எனக்கு புல்லரிக்கிறது - பவ்யா திரிக்கா


அவரது இசையை கேட்டாலே எனக்கு புல்லரிக்கிறது - பவ்யா திரிக்கா
x

நடிகை பவ்யா திரிக்கா ராகவ் மிர்தா இயக்கத்தில் "பன் பட்டர் ஜாம்" என்ற படத்தில் நடித்துள்ளார்.

சென்னை,

பிக்பாஸ் சீசன் வின்னரான ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக அறிமுகமான படம் "பன் பட்டர் ஜாம்". இப்படத்தை ராகவ் மிர்தா இயக்கி உள்ளார். ரெய்ன் ஆப் ஆரோஸ் எண்டர்டெயின்மென்ட் சார்பில் சுரேஷ் சுப்பிரமணியன் தயாரித்துள்ளார். படத்தில் ஆத்யா பிரசாத், பவ்யா திரிக்கா, சார்லி, சரண்யா பொன் வண்ணன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைத்துள்ள இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. விழாவில் நடிகை பவ்யாதிரிக்கா பேசுகையில், 'என் குடும்பம் மற்றும் நட்பு வட்டாரத்தில் எல்லா வயதை சேர்ந்த நபர்களும் இருகிறார்கள். எனக்கு இந்த பன் பட்டர் ஜாம் பட வாய்ப்பு வந்தபோது அதை சொன்னதும் உடனே எல்லோருமே ஆரவாரமாக சூப்பர் என்று சொன்னார்கள். அதை பார்த்ததுமே எனக்கு ஒரு பாசிட்டிவான உணர்வு ஏற்பட்டது. படத்தின் கதை பர்சனல் ஆக எனக்கு ரொம்ப ரொம்ப நெருக்கமானதாக இருந்தது.

இயக்குனர் ராகவ் ஒரு பர்பெக்சனிஸ்ட். சின்ன சின்ன விஷயங்களை கூட டீடைலாக சொல்லி இருக்கிறார். சார்லி சாரை திரையில் பார்க்கும்போதே ஒரு சந்தோசமாக இருக்கும். ஒரு ஆன்மீகவாதியும் கூட. அற்புதமான நடிகர். சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி இருவருடனும் நடித்தபோது எனக்கு என் அம்மா ஞாபகம் வந்துவிட்டது. நிவாஸ் கே. பிரசன்னாவின் இசையை கேட்டாலே எனக்கு புல்லரித்து விடும். ராஜூவைப் பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. அவுட்ஸ்டாண்டிங். காட்சிகளில் நடிக்கும் போது வெளியில் இருந்து என்னை சிரிக்க வைப்பார். எனக்கு அது கஷ்டமாக இருந்தது. ராஜூவுக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது" என்றார்.

1 More update

Next Story