“காக்கி சர்கஸ்” வெப்தொடர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

அமீன் பாரிப் இயக்கத்தில் முனிஷ்காந்த் நடித்துள்ள ‘காக்கி சர்கஸ்’ வெப்தொடர் ஏப்ரல் 10 முதல் ஜீ5 ஓடிடியில் வெளியாகிறது.
“காக்கி சர்கஸ்” வெப்தொடர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

திரில்லர் அம்சங்கள் கலந்த மொத்தம் 7 எபிசோடுகள் கொண்ட ‘காக்கி சர்கஸ்’ வெப்தொடர் ஒரு சப்-ஜெயிலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. இந்த சீரிஸை அமீன் பாரிப் எழுதி இயக்கியுள்ளார். ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரித்துள்ளார். மேலும், முனிஷ்காந்த், சுபாஷ் செல்வம், ராஜேஷ் மாதவன், கவுதமி நாயர், வின்சு ரேச், சவித்திரி, அம்ருதா, அப்துல் லீ, மருதுபாண்டியன், ராகேஷ் உஷார், விக்னேஷ்வர், அருண்குமார் பவும்பா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அமைதியான ஒரு கடற்கரை நகரத்தில் நடைபெறும் விசித்திரமான குற்றச் சம்பவம், ஒரு சப்-ஜெயிலை முழுமையான குழப்பத்தில் ஆழ்த்துகிறது. காரணம், யாரோ ஒருவர் சிறையிலிருந்து தப்பிச் செல்லாமல், தடைகளை உடைத்து அதற்குள் நுழைகிறார். புத்தகங்களில் மூழ்கியிருக்கும் ஒரு ஜெயிலரும், அளவுக்கு மீறிய ஆர்வமுள்ள ஒரு கான்ஸ்டபிளும் இந்த புதிரை புரிந்துகொள்ள போராடும் நிலையில், மர்மமான திருடன் பல அடிகள் முன்னிலையில் இருந்து, தான் உருவாக்கிய இந்த குழப்பங்களை ரசித்தபடி இருக்கிறான்.

சாதாரண ஊர்மக்கள், தங்களைத் தாங்களே டிடெக்டிவ்களாக நினைக்கும் சிலர், தெரியாமலே இதற்குள் சிக்கிக்கொள்ளும் கைதிகள் - இவர்கள் அனைவரும் சூழ்நிலையை இன்னும் வினோதமாக மாற்ற, இந்த வழக்கு எதிர்பாராத திருப்பங்களுடன் கூடிய பரபரப்பான வேட்டையாக மாறுகிறது. இங்கே எதுவுமே எளிதல்ல, ஒவ்வொன்றும் இன்னும் பல விசித்திரமான உண்மையை மறைத்து வைத்திருக்கிறது.

பார்வையாளர்களுக்கு எதிர்பாராத சுவாரஸ்யங்களும், பரபரப்பும், வித்தியாசமான நகைச்சுவையும் கலந்த ஒரு விருந்தாக அமைய உள்ள ‘காக்கி சர்கஸ்’, தமிழ் மற்றும் மலையாள ஜீ5 தளங்களில் ஏப்ரல் 10 முதல் ஒளிபரப்பாகவுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com