"காதலிக்க நேரமில்லை" படத்தின் 'என்னை இழுக்குதடி' வீடியோ பாடல் வெளியானது


“காதலிக்க நேரமில்லை” படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில், தீ குரலில் உருவாகியுள்ள ‘என்னை இழுக்குதடி’ வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.

சென்னை,

'பிரதர்' படத்தை தொடர்ந்து ரவிமோகன் நடிப்பில் வெளியாக உள்ள படம் 'காதலிக்க நேரமில்லை'. இதில், நித்யா மேனன், யோகி பாபு, லால், வினய், லட்சுமி கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். "வணக்கம் சென்னை" திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான கிருத்திகா உதயநிதி இப்படத்தை இயக்கி உள்ளார்.

ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருக்கும் இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ரொமான்டிக் காதல் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இத்திரைப்படத்தின் 'பிரேக் அப் டா' பாடல் வைரலானது.

இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த14-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. சமீபத்தில், 'காதலிக்க நேரமில்லை' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது.

இந்த நிலையில், 'காதலிக்க நேரமில்லை' படத்தின்'என்னை இழுக்குதடி' வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை தீ பாடியுள்ளார்.

1 More update

Next Story