உண்மை சம்பவம் கதையில் கலையரசன்

உண்மை சம்பவம் கதையில் கலையரசன் கலையரசன் கதாநாயகனாக நடிக்கிறார்.
உண்மை சம்பவம் கதையில் கலையரசன்
Published on: 

சமூகத்தில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து வாழை என்ற பெயரில் புதிய படம் தயாராகிறது. இதில் கலையரசன் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் மெட்ராஸ் படம் மூலம் பிரபலமாகி பல படங்களில் நடித்து இருக்கிறார். சமீபத்தில் திரைக்கு வந்த கலக தலைவன் படத்தில் உதய நிதியுடன் நடித்து இருந்தார். வாழை படத்தை மாரி செல்வராஜ் டைரக்டு செய்கிறார். இவர் ஏற்கனவே பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களை இயக்கி உள்ளார். தற்போது உதயநிதி நடிக்கும் மாமன்னன் படத்தையும் இயக்கி வருகிறார். வாழை படத்தில் பல சிறுவர்களும் நடிக்க உள்ளனர். இதில் கதாநாயகியாக நிகிலா விமல் மற்றும் திவ்யா துரைசாமி, வெயில் படம் மூலம் பிரபலமான பிரியங்கா ஆகியோரும் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com