கலையரசன் நடித்துள்ள 'டிரெண்டிங்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

'டிரெண்டிங்' படம் கமர்ஷியல் பொழுதுபோக்கு கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
கலையரசன் நடித்துள்ள 'டிரெண்டிங்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

சென்னை,

மெட்ராஸ் திரைப்படத்தின் மூலம் அனைவருக்கும் பரீட்சையமானவர் நடிகர் கலையரசன். அதை தொடர்ந்து பல திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் பதிந்துள்ளார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான 'மெட்ராஸ்காரன்' திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து தற்போது கலையரசன் கதாநாயகனாக 'டிரெண்டிங்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனர் சிவராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தில் நாயகியாக பிரியாலயா நடித்துள்ளார். இவர் இதற்கு முன் சந்தானம் நடித்த இங்க நான் தான் கிங்கு மற்றும் குட் நைட் திரைப்படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இவர்களுடன் பிரேம் குமார் மற்றும் பெசன்ட் ரவி நடித்துள்ளனர். சாம் சி.எஸ். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற ஜூலை 18-ந் தேதி படம் திரைக்கு வருகிறது.

இப்படம் பற்றி இயக்குனர் சிவராஜ் கூறுகையில், "இன்றைய கால கட்டத்தில் சமூக வலைதளங்களில் தம்பதிகள் செய்து வரும் ரீல்ஸ் வீடியோவினால் ஏற்படும் ஆபத்துகள் மற்றும் சந்திக்கும் பிரச்சினையை மையமாக கொண்டு கமர்ஷியல் பொழுதுபோக்குடன் 'டிரெண்டிங்' படம் உருவாகி இருக்கிறது. ஆன்லைன் தம்பதிகளை பற்றிய கதை இது. தமிழ் சினிமாவிற்கு படத்தின் கதை புதிதாக இருக்கும். 3 கோணத்தில் படத்தின் கதை உருவாகி உள்ளது. இந்த படம் ஒரு சைக்காலஜிக்கல் திரில்லர்" என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com