'தக் லைப்' பட பேனர்கள் கிழிப்பு...கமலின் பேச்சுக்கு தொடரும் எதிர்ப்பு

தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம் என்ற கமலின் பேச்சுக்கு கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
சென்னை.
'தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது' என்ற கமல்ஹாசனின் கருத்திற்கு கர்நாடகாவில் தொடர்ந்து எதிர்ப்பு கிளம்பி வருகிறது.
சமீபத்தில் சென்னையில் 'தக் லைப்' படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கன்னட நடிகர் சிவராஜ்குமார் கலந்துகொண்டார். அப்போது கமல்ஹாசன் பேசுகையில், " ராஜ்குமாருடைய குடும்பம் அந்த ஊரில் இருக்கும் எனது குடும்பம். அதனால்தான் அவர் இங்கு வந்திருக்கிறார். எனது பேச்சை தொடங்கும் போது உயிரே உறவே தமிழே என தொடங்கினேன். தமிழிலிருந்து பிறந்ததுதான் கன்னடம்" என பேசியிருந்தார்.
தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம் என்ற கமலின் பேச்சுக்கு கர்நாடக மாநில பா.ஜ.க. தலைவர் எடியூரப்பா தனது எதிர்ப்பை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், 'தக் லைப்' பட பேனர்கள் கர்நாடகாவில் கிழிக்கப்பட்டுள்ளன. மேலும், இதற்கு கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. இதனால் கர்நாடகாவில் தக் லைப் படம் வெளியாவதில் சிக்கல் எழும் நிலை உள்ளது






