கமலின் 237-வது படத்தின் அறிவிப்பு வெளியானது !

கமலின் 237-வது படத்தை அன்பறிவ் சகோதரர்கள் இயக்க உள்ளனர்.
கமலின் 237-வது படத்தின் அறிவிப்பு வெளியானது !
Published on

சென்னை,

இந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் கமல்ஹாசன். இவர் சமீபத்தில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன்-2 படத்தில் நடித்து முடித்தார். இப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. அதனை தொடர்ந்து தனது 234-வது படமான 'தக் லைப்' படத்தில் தற்போது நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ளார். 37 வருடங்களுக்கு பிறகு இருவரும் இணைந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதனை தொடர்ந்து கமலின் 235-வது படத்தை இயக்குனர் பா.ரஞ்சித்தும், 236-வது படத்தை இயக்குனர் நெல்சனும் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தற்போதுவரை வெளியாகவில்லை.

இந்தநிலையில், கமலின் 237-வது படத்தை பிரபல சண்டை பயிற்சியாளர்களான அன்பறிவ் (அன்புமணி, அறிவுமணி) சகோதரர்கள் இயக்க உள்ளனர். இவர்கள் 'மெட்ராஸ்' படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள். இவர்கள் கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி படங்களிலும் பணியாற்றி வருகிறார்கள்.

சமீபத்தில் இந்த படத்தின் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ராஜ் கமல் பிலிம்ஸ் வெளியிட்டது. இந்த நிலையில் தற்போது, இப்படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது, இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு ஜனவரி மாதம் துவங்க உள்ளதாகவும், ஆக்சன் படமாக உருவாக உள்ளதாகவும் அன்பறிவ் சகோதரர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com