மத்திய மந்திரியுடன் காதலா? - மனம் திறந்த கங்கனா ரனாவத்

தங்களுக்கு இடையிலான உறவு முற்றிலும் "நட்பு ரீதியானது" மட்டுமே என்று கங்கனா தெளிவுபடுத்தியுள்ளார்.
மத்திய மந்திரியுடன் காதலா? - மனம் திறந்த கங்கனா ரனாவத்
Published on

மும்பை,

பாலிவுட் நடிகையும், நாடாளுமன்ற உறுப்பினருமான கங்கனா ரனாவத், மத்திய மந்திரி சிராக் பாஸ்வான் உடன் தன்னை இணைத்துப் பேசப்படும் காதல் வதந்திகளைத் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

சிராக் பாஸ்வானுக்கும் தமக்கும் இடையிலான உறவு முற்றிலும் "நட்பு ரீதியானது" மட்டுமே என்று கங்கனா தெளிவுபடுத்தியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "சிராக் எனது நண்பர். எங்கள் இருவருக்கும் இடையிலான நட்பு பல ஆண்டுகளாக உள்ளது. ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்கு முன்பே நாங்கள் இருவரும் இணைந்து ஒரு திரைப்படத்தில் (miley naa miley hum) நடித்தோம். அன்றிலிருந்து இன்று வரை நாங்கள் நல்ல நண்பர்களாக இருந்து வருகிறோம்.

Also Read
காதல் வதந்திகள், பழைய காயங்கள் – மனம் திறந்து பேசிய கங்கனா ரணாவத்
மத்திய மந்திரியுடன் காதலா? - மனம் திறந்த கங்கனா ரனாவத்

எங்களுக்குள் காதல் இருந்திருந்தால், அது எப்போதோ மலர்ந்திருக்கும். நாங்கள் ஒருவருக்கொருவர் மிகுந்த மரியாதையுடனும், சகஜமாகவும் பழகுகிறோம். ஆனால், நட்பைத் தாண்டி எங்களுக்குள் வேறு எதுவும் இல்லை. எந்தக் காதலும் இல்லை" என்று கூறி இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் இவர்கள் இருவரும் சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து இந்த வதந்திகள் கிளம்பியது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com