கங்குவா புரமோஷன் : மும்பை ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்ட நடிகர் சூர்யா

மும்பையில் நடைபெற்ற கங்குவா படத்தின் புரமோஷனில் நடிகர் சூர்யா ரசிகர்களுடன் இணைந்து செல்பி எடுத்துக் கொண்டார்.
கங்குவா புரமோஷன் : மும்பை ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்ட நடிகர் சூர்யா
Published on

மும்பை,

இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

வெற்றி ஒளிப்பதிவு செய்யும் இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக உருவாகியுள்ளது. இத்திரைப்படம் அடுத்த மாதம் 14-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 'கங்குவா' படத்தின் புரமோஷன் பணிகளை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்கிடையில் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், சைனீஸ், ஸ்பானிஷ் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. இந்தநிலையில், இப்படத்தின் பிறமொழி டப்பிங்கிலும் சூர்யாவின் குரலே ஏஐ தொழில் நுட்பத்தில் பயன்படுத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இத்திரைப்படம் வருகிற நவம்பர் 14-ந் தேதி படத்தை வெளியிடுவதாக கங்குவா தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

தற்போது, படத்திற்கான புரமோஷன் நேர்காணல்களில் படக்குழுவினர் கலந்துகொண்டு வருகின்றனர். இன்று மும்பையில் நடைபெற்ற புரமோஷனில் சூர்யா கலந்துகொண்டார். அப்போது, ரசிகர்கள் அவரை சூழ்ந்து தங்களது அன்பை வெளிப்படுத்தினர். நடிகர் சூர்யாவும் அவர்களுடன் இணைந்து செல்பி எடுத்து மகிழ்ந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 20-ந் தேதி சென்னை சாய் ராம் கல்லூரியில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com