'கண்ணப்பா' திரைப்படம் : அக்சய் குமாரின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியீடு

வரலாற்று புதினத்தை தழுவி உருவாகியுள்ள 'கண்ணப்பா' திரைப்படம் வருகிற ஜூன் 27-ந் தேதி வெளியாக உள்ளது.
'கண்ணப்பா' திரைப்படம் : அக்சய் குமாரின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியீடு
Published on

சென்னை,

தெலுங்கில் வரலாற்று புதினத்தை தழுவி உருவாகி இருக்கும் ஆன்மிக திரைப்படம் 'கண்ணப்பா'. மிகவும் பிரபலமான மகாபாரதம் தொடரை இயக்கிய பாலிவுட் இயக்குனர் முகேஷ் குமார் சிங் இத்திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். வரலாற்று பின்னணியில் கடவுள் சிவனை வழிபடும் அவரது தீவிர பக்தன் கண்ணப்பரை பற்றிய கதையை தழுவி இப்படம் உருவாகி இருக்கிறது.

இத்திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு கண்ணப்பர் வேடத்தில் நடித்துள்ளார். மேலும், மோகன்லால், பிரபாஸ், காஜல் அகர்வால், அக்சய் குமார், பிரீத்தி முகுந்தன், மோகன்பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இப்படம் வருகிற ஜூன் 27-ந் தேதி உலக அளவில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இப்படத்தில் நடித்துள்ள அக்சய் குமாரின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியாகி உள்ளது. அதன்படி, கண்ணப்பா படத்தில் அக்சய் குமார் 'சிவன்' கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com