கார்த்தியின் “மார்ஷல்” படத்தின் ரிலீஸ் அப்டேட்

நடிகர் கார்த்தியின் ‘மார்ஷல்’ படம் தீபாவளி வெளியீடாக திரைக்கு வருமென இயக்குநர் தமிழ் தெரிவித்துள்ளார்.
கார்த்தியின் “மார்ஷல்” படத்தின் ரிலீஸ் அப்டேட்
Published on

கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் 'சார்தார் 2' படத்தில் கார்த்தி நடித்து வருகிறார்.

‘டாணாக்காரன்’ பட இயக்குனர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி புதிய படத்தில் நடித்து வருகிறார். இது கார்த்தியின் 29-வது படமாகும். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் கடல் பின்னணியில் நடக்கும் வெறித்தனமான கேங்ஸ்டர் கதையில் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு "மார்ஷல்" என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.

கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷனும், வில்லன் கதாபாத்திரத்தில் நிவின் பாலி நடிக்கின்றனர். பிரபல தெலுங்கு நடிகரான நானி கேமியோ ரேலில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு, ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கீழக்கரையில் சில மாதங்களுக்கு முன் துவங்கியது. இதற்கான, கார்த்தியின் தோற்றம் மற்றும் படப்பிடிப்பு வீடியோக்கள் இணையத்தில் கசிந்து வைரலாகின. 1960 காலகட்டங்களில் நடந்த கேங்ஸ்டர் கதையாக இப்படம் உருவாகி வருவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்ததாகவும் இந்தாண்டு தீபாவளி வெளியீடாக ‘மார்ஷல்’ படம் திரைக்கு வருமென இயக்குநர் தமிழ் தெரிவித்துள்ளார்.

தமிழ் எழுதிய ‘சிறை’ திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வெற்றிப்படமானது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com