கருப்பணசாமிக்கு 18 அடி அரிவாள் காணிக்கை செலுத்திய “கருப்பு” பட இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி

சூர்யாவின் திரையுலக பயணத்தில் புதிய வசூல் சாதனையை ‘கருப்பு’ படம் பதிவு செய்துள்ளது.
கருப்பணசாமிக்கு  18 அடி அரிவாள் காணிக்கை  செலுத்திய “கருப்பு” பட இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி
Published on

சென்னை,

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர்களான சூர்யா மற்றும் திரிஷா இணைந்து நடித்த ‘கருப்பு’ திரைப்படம் கடந்த 15ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் வெளியான இந்த படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். மேலும் சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

ஏற்கெனவே, ‘கருப்பு’ படம் உலகளவில் ரூ.207 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. ‘கருப்பு’ திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 100 கோடி வசூலித்ததாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. திரைப்படம் விரைவில் ரூ. 300 கோடியைக் கடந்து, சூர்யாவின் திரைப்பயணத்தில் மிகச்சிறந்த வசூல்செய்த திரைப்படமாக இந்தப் படம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படத்திற்குக் கிடைத்துவரும் வரவேற்பைத் தொடர்ந்து பல்வேறு ஊர்களில் இருக்கும் திரையரங்குகளுக்குத் தியேட்டர் விசிட் சென்று வருகிறார் ஆர்.ஜே. பாலாஜி. திருநெல்வேலி சென்றவர் அங்குச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளியாகி, பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்து வரும் ‘கருப்பு’ திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து, மதுரை அழகர்கோயில் பதினெட்டாம்படி கருப்பணசாமிக்கு 18 அடி உயர அரிவாள் காணிக்கை செலுத்தினார் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி.

X

Daily Thanthi
www.dailythanthi.com