பல நாள் காத்திருப்புக்கு முடிவு... சூர்யாவின் ‘கருப்பு’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் சூர்யாவின் 45-வது படம் 'கருப்பு'.
பல நாள் காத்திருப்புக்கு முடிவு...  சூர்யாவின் ‘கருப்பு’ ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

சென்னை,

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படம் வரும் மே மாதம் 14-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

நடிகர் சூர்யாவின் 45-வது படம் 'கருப்பு'. இந்தப் படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கியுள்ளார். இப்படத்தில் திரிஷா, நட்டி, இந்திரன்ஸ், சுவாசிகா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார்.

Also Read
நீண்ட காத்திருப்புக்கு முடிவு... ‘எல்.ஐ.கே’ ரிலீஸ் தேதி அறிவிப்பு
பல நாள் காத்திருப்புக்கு முடிவு...  சூர்யாவின் ‘கருப்பு’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

இப்படத்தின் ரிலீஸ் பல நாட்களாக தள்ளிபோனநிலையில் எப்போது திரைக்கு வரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இந்நிலையில், அந்த காத்திருப்புக்கு படக்குழு முடிவுகட்டியுள்ளது. அதன்படி, ‘கருப்பு’ திரைப்படம் வரும் மே மாதம் 14-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com