நீண்ட காத்திருப்புக்கு முடிவு... ‘எல்.ஐ.கே’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள புதிய படம் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' (எல்.ஐ.கே).
நீண்ட காத்திருப்புக்கு முடிவு... ‘எல்.ஐ.கே’ ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

சென்னை,

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கிரித்தி ஷெட்டி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ திரைப்படம் வரும் ஏப்ரல் 3ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள புதிய படம் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' (எல்.ஐ.கே). இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா, கீர்த்தி ஷெட்டி, சீமான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ மற்றும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.

Also Read
ஏ.ஆர்.ரகுமான், சாய் அபயங்கர்... மணிரத்னம் - விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைப்பது யார்?
நீண்ட காத்திருப்புக்கு முடிவு... ‘எல்.ஐ.கே’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

இப்படத்தின் ரிலீஸ் பல நாட்களாக தள்ளிபோனநிலையில் எப்போது திரைக்கு வரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இந்நிலையில், அந்த காத்திருப்புக்கு படக்குழு முடிவுகட்டியுள்ளது. அதன்படி, 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படம் ஏப்ரல் 3ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com