

கவின் மற்றும் நயன்தாரா இணைந்து நடித்துள்ள ‘ஹாய்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, நடிகர் கவினுடன் இணைந்து ‘ஹாய்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தினை லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த விஷ்ணு எடவன் இயக்குகிறார். இந்தப் படத்தினை, '7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்' மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனின் 'ரௌடி பிக்சர்ஸ்' ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
வயதில் சிறியவன் தனக்கு மூத்த வயதுடைய ஒரு பெண்ணின் மீது காதலில் விழுகிறான் போன்ற கதைக்களத்தில் ‘ஹாய்’ படம் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது. படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், ‘ஹாய்’ திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது.
ஜென் மார்டின் இசையமைப்பில், விஷ்ணு எடவன் எழுதிய வரிகளுக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் பாடிய 'கண்ணக்குழியா' பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் இரண்டாவது பாடலான 'ரசகுல்லா' சமீபத்தில் வெளியானது. இசையமைப்பாளர் ஜென் மார்டின் இசையில் உருவாகியுள்ள இந்தப் பாடலை, முன்னணி இசையமைப்பாளரும் பாடகருமான அனிருத் பாடியுள்ளார். இசையமைப்பாளர் ஜென் மார்டின் இசையமைத்துள்ள இப்படத்தின் மூன்று பாடல்கள் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், கவின் மற்றும் நயன்தாரா இணைந்து நடித்துள்ள ‘ஹாய்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு சிறப்பு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.
நயன்தாரா, கவின் நடித்துள்ள ‘ஹாய்’ படம் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகவிருந்தது. விஷாலின் ‘மகுடம்’ மற்றும் சூர்யாவின் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படங்கள் ஆகஸ்ட் 14-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதன் காரணமாக திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் தற்போது ‘ஹாய்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு தள்ளிவைத்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.