'ஸ்டார்' படம் பார்க்க சென்ற கவின் - புகைப்படம் எடுக்க குவிந்த ரசிகர்கள்

'ஸ்டார்' திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.
'ஸ்டார்' படம் பார்க்க சென்ற கவின் - புகைப்படம் எடுக்க குவிந்த ரசிகர்கள்
Published on

சென்னை,

'டாடா' படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் கவின் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'ஸ்டார்'. இந்த படத்தை 'பியார் பிரேமா காதல்' படத்தை இயக்கி பிரபலமான இளன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் லால், அதிதி போஹங்கர், பிரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பி.வி.எஸ்.என்.பிரசாத், ஶ்ரீநிதி சாகர் ஆகியோர் தயாரித்துள்ள இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். எழில் அரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரதீப் இ ராகவ் படத்தொகுப்பு செய்து இருக்கிறார்.

'ஸ்டார்' திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  நேற்று நடிகர் கவின் சென்னையில் உள்ள ஒரு திரையரங்கிற்கு ஸ்டார் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை காண சென்றிருக்கிறார்.

படம் பார்த்துவிட்டு திரையரங்கை விட்டு கவின் வெளியே வந்தபோது ரசிகர்கள் அவரிடம் புகைப்படம் எடுக்க குவிந்தனர். இதுகுறித்தான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

View this post on Instagram

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com