

கவின்-நயன்தாரா இணைந்து நடிக்கும் ‘ஹாய்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது. இத்திரைப்படம் வரும் 28-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, நடிகர் கவினுடன் இணைந்து ‘ஹாய்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தினை லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த விஷ்ணு எடவன் இயக்குகிறார். இந்தப் படத்தினை, '7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்' மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனின் 'ரவுடி பிக்சர்ஸ்' ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
ஜென் மார்டின் இசையமைப்பில், விஷ்ணு எடவன் எழுதிய வரிகளுக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் பாடிய 'கண்ணக்குழியா' பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் இரண்டாவது பாடலான 'ரசகுல்லா' சமீபத்தில் வெளியானது. இசையமைப்பாளர் ஜென் மார்டின் இசையில் உருவாகியுள்ள இந்தப் பாடலை, முன்னணி இசையமைப்பாளரும் பாடகருமான அனிருத் பாடியுள்ளார். இசையமைப்பாளர் ஜென் மார்டின் இசையமைத்துள்ள இப்படத்தின் மூன்று பாடல்கள் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகவிருந்த ‘ஹாய்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு சிறப்பு வீடியோ வெளியிட்டு அறிவித்தது.
வயதில் சிறியவன் தனக்கு மூத்த வயதுடைய ஒரு பெண்ணின் மீது காதலில் விழுகிறான் போன்ற கதைக்களத்தில் ‘ஹாய்’ படம் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. இசையமைப்பாளர் ஜென் மார்டின் இசையில் இப்படத்தின் மூன்று பாடல்கள் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. ‘ஹாய்’ திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 28-ந்தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ‘ஹாய்’ படத்தின் டிரெய்லர் வெளியானது. இத்திரைப்படம் வரும் 28-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.