கவின் நடிக்கவுள்ள புதிய படத்தின் பூஜை வீடியோ வெளியீடு

நடிகர் கவினின் 9-வது படத்தை இயக்குனர் கென் ராய்சன் இயக்க உள்ளார்.
கவின் நடிக்கவுள்ள புதிய படத்தின் பூஜை வீடியோ வெளியீடு
Published on

சென்னை,

'லிப்ட், டாடா, ஸ்டார்' போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் கவின். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான 'பிளடி பெக்கர்' படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. அதனை தொடர்ந்து கிஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

அதனை தொடர்ந்து தண்டட்டி பட இயக்குனர் ராம் சங்கையா இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

இதற்கிடையில், நேற்று முன்தினம் நடிகர் கவின் நடிக்க உள்ள மற்றொரு புதிய படத்திற்கான பூஜை நடைபெற்றது. இது நடிகர் கவினின் 9-வது படமாகும். இந்த படத்தை கனா காணும் காலங்கள் தொடரை இயக்கிய கென் ராய்சன் இயக்க உள்ளார். இதில் கவினுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடிக்க உள்ளார். படத்தில் நடிக்க உள்ள மற்ற நடிகர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாக உள்ளன. இந்த நிலையில் புதிய படத்தின் பூஜை வீடியோவை தயாரிப்பு நிறுவனமான திங்க் ஸ்டுடியோ வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com