திருமணத்துக்கு பின் மறுபடியும் நடிக்கவந்தார் 'கயல்' ஆனந்தி

திருமணத்துக்கு பின் மறுபடியும் நடிக்கவந்தார் 'கயல்' ஆனந்தி

திருமணத்துக்கு பின் ஓய்வு எடுத்துக்கொண்டு நடிக்க வந்து இருப்பதாக ‘கயல்’ ஆனந்தி கூறினார்.
Published on

பிரபு சாலமன் இயக்கத்தில் வெளிவந்த 'கயல்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஆனந்தி. இவர் தனது பெயருடன் அறிமுக படத்தின் பெயரையும் இணைத்துக்கொண்டு 'கயல்' ஆனந்தி ஆகிவிட்டார். அவர் ஒரு உதவி டைரக்டரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. குழந்தையின் பெயர் பிளாட்டோ நன்மாறன். திருமணத்துக்கு பின் 2 வருடங்கள் ஒதுங்கியிருந்த ஆனந்தி, மறுபடியும் நடிக்க வந்து விட்டார்.

அவர் கூறியதாவது:-


''திருமணத்துக்கு பின் கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கொண்டு இப்போது நடிக்க வந்து இருக்கிறேன். அதற்கு காரணம், 'டைட்டானிக்' என்ற தமிழ் படம்தான். தயாரிப்பாளர் சி.வி.குமார், டைரக்டர் ஜானகிராமன் இருவரும் என்னிடம் 'டைட்டானிக்' படத்தின் கதையை சொன்னதுமே பிடித்து விட்டது.மிக அருமையான கதை. படத்தில் எனக்கு ஜோடி கலையரசன். எங்களுடன் காளி வெங்கட்-மதுமிதா, ராகவ் விஜய்-ஆஸ்னா சவேரி என மேலும் 2 ஜோடிகளும் இருக்கிறார்கள். சிறப்பு தோற்றத்தில் டைரக்டர் பாலாஜி மோகன், காயத்ரி ஆகிய இருவரும் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்துடன் மேலும் 4 புதிய படங்களிலும் நடிக்க சம்மதித்து இருக்கிறேன்.''

இவ்வாறு 'கயல்' ஆனந்தி கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com