மீண்டும் பாலிவுட் படத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்


மீண்டும் பாலிவுட் படத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்
x

இயக்குனர் ஆதித்யா நிம்பல்கர் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.

சென்னை,

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவரது நடிப்பில் தமிழில் கடைசியாக 'ரகு தாத்தா' படம் வெளியானது. தற்போது அவர் 'அக்கா' என்ற ஒரு வெப்சீரிஸில் நடித்து வருகிறார். இது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

இதற்கிடையில் இவர் தெறி படத்தின் இந்தி ரீமேக்கான 'பேபி ஜான்' படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் முதன்முறையாக அறிமுகமானார். இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

அதனை தொடர்ந்து மீண்டும் பாலிவுட் சினிமாவில் புதிய படம் ஒன்றில் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தினை 'செக்டார் 36' படத்தை இயக்கிய ஆதித்யா நிம்பல்கர் இயக்குகிறார். அதில் கதாநாயகனாக ராஜ்குமார் ராவ் நடிக்க உள்ளார். இந்த படத்தை கம்பா பிலிம்ஸ் சார்பில் பத்ரலேகா தயாரிக்க உள்ளார்.

1 More update

Next Story