இளம் நடிகைக்கு பாலியல் தொல்லை:தாயார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு

சூப்பர் மார்க்கெட்டில் இளம் நடிகைக்கு பாலியல் தொல்லை தாயார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
இளம் நடிகைக்கு பாலியல் தொல்லை:தாயார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு
Published on

திருவனந்தபுரம்:

பிரபல மலையாள இளம் நடிகை அன்னா பென். கொச்சியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்ற போது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். இது குறித்து தனது அனுபவத்தை அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில் அன்னா பென் தாயார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

"நாங்கள் இன்னும் குறிப்பிட்ட நபர்களை அடையாளம் காணவில்லை; இருப்பினும், தொடர்ந்து விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. சிசிடிவி காட்சிகளையும் நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம் என்று விசாரணை அதிகாரி தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து கேரள பெண்கள் ஆணையம் தானாக முன் வந்து வழக்கு பதிவு செய்து உள்ளது.

நடிகை அன்னா பென் கும்பலாங்கி நைட்ஸ், ஹெலன், கப்பேலோ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அன்னா பென் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

நான் ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்றேன். ஆட்கள் நடமாட்டம் குறைவாக இருந்த இடத்தில் என்னை கடந்து சென்ற இரண்டு ஆண்களில் ஒருவர் வேண்டுமென்றே எனது பின்பக்கத்தில் கைவைத்து விட்டு சென்றார். அது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் உடனே அங்கிருந்து நழுவினர். எனக்கு கோபம் வந்தது. பிறகு காய்கறி வாங்க சென்றோம். அங்கும் என்னை பின் தொடர்ந்து வந்து நான் நடித்த படங்கள் பற்றி கேட்க தொடங்கினர். தொலைவில் எனது அம்மா வருவதை பார்த்ததும் விலகி சென்று விட்டனர். பெண்ணாக இருப்பது சோர்வை ஏற்படுத்துகிறது. இதுபோன்ற கேவலமான ஆண்களால் வெளியே செல்லும் பெண்கள் நிலையை பார்த்து கவலை வருகிறது. என்னை போல் இல்லாமல் மற்ற பெண்கள் இதுபோன்ற ஆண்கள் முகத்தில் ஓங்கி அறையும் துணிச்சலை பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com