'தோனி' படத்திற்கு முன் அனுபவித்த துயரங்கள் - மனம் திறந்த கியாரா அத்வானி

தனது ஆரம்பகால திரையுலக போராட்டங்கள் பற்றி கியாரா பகிர்ந்துகொண்டார்.
'தோனி' படத்திற்கு முன் அனுபவித்த துயரங்கள் - மனம் திறந்த கியாரா அத்வானி
Published on

சென்னை,

நடிகை கியாரா அத்வானி சமீபத்தில் பெண் குழந்தைக்குத் தாயானார். அவரது மகளுக்கு சில மாதங்களே ஆகும் நிலையில், மீண்டும் திரைப்படங்களில் நடிக்கத் தயாராகி வருகிறார். தனது திரையுலக வாழ்க்கையில் ஒரு வெற்றிகரமான புதிய அத்தியாயத்தைத் தொடங்க அவர் ஆர்வமாக உள்ளார்.

சமீபத்தில் ஒரு போட்காஸ்டில் பேசிய கியாரா அத்வானி, தனது ஆரம்பகால திரையுலக போராட்டங்கள் மற்றும் தனது அறிமுகப் படம் குறித்த தவறான புரிதல்கள் பற்றி பகிர்ந்துகொண்டார்.

பலரும் 'எம்.எஸ்.தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி' அல்லது 'கபீர் சிங்' தான் கியாராவின் முதல் படம் என்று நினைக்கிறார்கள். ஆனால், 2014-ல் வெளியான 'பக்லி' (Fugly) தான் தனது உண்மையான அறிமுகத் திரைப்படம் என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.

Also Read
"தி லார்ட் ஆப் தி ரிங்ஸ்" சீசன் 3 - ரிலீஸ் தேதி அறிவிப்பு
'தோனி' படத்திற்கு முன் அனுபவித்த துயரங்கள் - மனம் திறந்த கியாரா அத்வானி

'பக்லி' படத்தின் தோல்வியால் அவரது வாழ்க்கையில் ஒரு நீண்ட இடைவெளி ஏற்பட்டது. இதனால் மீண்டும் ஆரம்பத்திலிருந்தே தனது போராட்டத்தைத் தொடங்க வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது.

வெற்றியை அடைவதற்கு முன்பு பலமுறை ஆடிஷன்களில் பங்கேற்று, தொடர்ச்சியான நிராகரிப்புகளைச் சந்தித்து, தன்னை மீண்டும் மீண்டும் நிரூபிக்க வேண்டியிருந்தது என்று அவர் பகிர்ந்து கொண்டார்.

"நான் சந்தித்த கஷ்டங்கள் தான் எனக்குச் சிறந்த ஆசிரியர்களாக அமைந்தன" என்று கூறிய கியாரா, ஒவ்வொரு நடிகையும் தனது பயணத்தில் ஏதோ ஒரு கட்டத்தில் இத்தகைய கடினமான காலங்களைக் கடந்துதான் வரவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com