

மும்பை,
யாஷ் நடிப்பில் உருவாகி வரும் 'டாக்சிக்' (Toxic) திரைப்படத்தில், நடிகை கியாரா அத்வானி நெருக்கமான காட்சியில் நடித்துள்ளதாக தெரிகிறது. தற்போது அந்தக் காட்சியை நீக்கவோ அல்லது குறைக்கவோ அவர் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில், யாஷ் மற்றும் கியாரா அத்வானி இடையே நெருக்கமான காதல் காட்சி படமாக்கப்பட்டதாக தெரிகிறது. தற்போது எடிட்டிங்கில் அந்தக் காட்சியைப் பார்த்த கியாரா, அது திரையில் மிகவும் 'போல்டாக' (Bold) இருப்பதாகக் கருதி அந்த குறிப்பிட்ட காட்சியைப் படத்தின் நீளத்திலிருந்து குறைக்க வேண்டும் அல்லது முழுமையாக நீக்க வேண்டும் என்று இயக்குநரிடம் அவர் கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
கியாராவின் இந்த முடிவால் எடிட்டிங்கில் மீண்டும் மாற்றங்கள் செய்யப்படலாம் எனத் தெரிகிறது. ஏற்கனவே 'டாக்சிக்' திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி தள்ளிப்போயுள்ளது குறிப்பிடத்தக்கது.