கிச்சா சுதீப்பின் புதிய படம்.. பர்ஸ்ட் லுக் வெளியீடு

கிச்சா சுதீப் மீண்டும் விஜய் கார்த்திகேயா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
கிச்சா சுதீப்பின் புதிய படம்.. பர்ஸ்ட் லுக் வெளியீடு
Published on

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் கிச்சா சுதீப். இவர் நான் ஈ, அருந்ததி, புலி ஆகிய திரைப்படங்களில் வில்லனாக நடித்து தமிழ் மக்களின் மனதில் பதிந்தார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான மேக்ஸ் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்தை விஜய் கார்த்திகேயா இயக்கினார்.

இந்நிலையில் கிச்சா மீண்டும் விஜய் கார்த்திகேயா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இது கிச்சா சுதீப்பின் 47- வது திரைப்படமாகும். இப்படத்திற்கு தற்காலிகமாக கே47' என பெயரிடப்பட்டிருந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், நடிகர் கிச்சா சுதீப் இன்று தனது 51வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில், படக்குழு இந்த படத்தின் புதிய படத்தின் பர்ஸ்ட்லுக் டைட்டில் வெளியிட்டப்பட்டுள்ளது. அதில், இப்படத்திற்கு மார்க் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், இப்படம் வருகிற கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com