கில்லர் பட கதாநாயகியின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு புதிய போஸ்டர் வெளியீடு

இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா அளவில் வெளியாக இருக்கிறது.
சென்னை,
தென்னிந்திய சினிமாவின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவரான எஸ்.ஜே.சூர்யா, நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட அவரது கனவு படத்தை தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடிக்க உள்ள இப்படத்திற்கு ''கில்லர்'' எனப்பெயரிடப்பட்டுள்ளது. ஸ்ரீ கோகுலம் மூவிஸ் தயாரிக்கும் இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா அளவில் வெளியாக இருக்கிறது.
இப்படத்தில் கதாநாயகியாக நடிகை பிரீத்தி அஸ்ரானி இணைந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. இதில், எஸ்.ஜே.சூர்யா, பிரீத்தி அஸ்ரானி, கார்த்தி, ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், நேற்று அவரது பிறந்தநாளை கொண்டாடிய பிரீத்தி அஸ்ரானியை வாழ்த்தி படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டது. அதில் சிகப்பு நிற ஆடையில் கையில் ஒரு புல்லட் வைத்துள்ளார்.






