கிஷோர் ராஜ்குமாரின் “கோயம்பத்தூர் மாப்பிள்ளை” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

கிஷோர் ராஜ்குமார் எழுதி, இயக்கி, நடிக்கும் ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ திரைப்படத்தில் அன்னா பென், கே.எஸ். ரவிகுமார், பொன்வண்ணன் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கிஷோர் ராஜ்குமாரின் “கோயம்பத்தூர் மாப்பிள்ளை” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on: 

‘நாய் சேகர்’ இயக்குநர் கிஷோர் ராஜ்குமார் எழுதி, இயக்கி, நாயகனாக நடிக்கும் ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் பேனரில் கார்த்திக் ஸ்ரீநிவாஸ் மற்றும் மகாவீர் அசோக் தயாரித்துள்ள ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ திரைப்படத்தை கிஷோர் ராஜ்குமார் எழுதி, இயக்கி, நாயகனாகவும் நடித்துள்ளார். பிரபல மலையாள நடிகையும் ‘கொட்டுக்காளி’ தமிழ் படத்தில் நடித்தவருமான‌ அன்னா பென் நாயகியாக நடிக்க, கே.எஸ். ரவிகுமார், பொன்வண்ணன், விஜி சந்திரசேகர், சித்தப்பு சரவணன், விநோதினி வைத்தியநாதன், லொள்ளு சபா மனோகரன், மோனிஷா பிளஸ்ஸி, வாட்ஸப் மணி, நக்கலைட்ஸ் ரஞ்சித் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் வெளியிட்டார். நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ திரைப்படத்தை தமிழ்நாடு முழுவதும் ஏஜிஎஸ் சினிமாஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

இந்த நிலையில், காதலும் நகைச்சுவையும் கலந்த கலகலப்பான‌ ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ திரைப்படம் டிசம்பர் 24 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

29 நாள்களில் படப்பிடிப்பு நிறைவு

திரைப்படம் குறித்து பேசிய இயக்குநரும் நாயகனுமான கிஷோர் ராஜ்குமார், “வெறும் 29 நாள்களில் ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ படப்பிடிப்பை முடித்துள்ளோம். குண்டாக இருப்பவர்களை நகைச்சுவை வேடங்களில் சித்தரித்து நிறைய படங்கள் வந்துள்ள நிலையில், உடல் எடை அதிகமாகக் கொண்ட பாத்திரத்தை நாயகனாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் இது. அந்த வேடத்தில் நானே நடிப்பது மகிழ்ச்சி. அனைத்து தரப்பு ரசிகர்களும் குடும்பத்துடன் கண்டு ரசிக்கும் வைகையில் இந்தப் படம் உருவாகியுள்ளது, தொடக்கம் முதல் இறுதி வரை கலகலப்புக்கு பஞ்சம் இல்லாத வகையில் இந்த திரைப்படம் இருக்கும்” என்று தெரிவித்தார்.

படத்தின் இசை வெளியீடு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com