'கிரிஷ் 4' பட்ஜெட் சர்ச்சை: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ராகேஷ் ரோஷன்

தயாரிப்பு தரப்பினரிடையே எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை என்று ராகேஷ் ரோஷன் தெரிவித்துள்ளார்.
'கிரிஷ் 4' பட்ஜெட் சர்ச்சை: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ராகேஷ் ரோஷன்
Published on

மும்பை,

ராகேஷ் ரோஷன் உருவாக்கிய இந்திய சூப்பர் ஹீரோ படம் `கிரிஷ்'. 2003ல் ராகேஷ் இயக்கி ஹிரித்திக் ரோஷன் நடித்து வெளியான கோய் மில் கயா படத்தின் தொடர்ச்சியாக உருவான `கிரிஷ்' மிகப்பெரிய ஹிட்டானது. இந்தி சினிமாவாக இருந்தாலும் பல மொழிகளிலும் டப் செய்யப்பட்டு பரவலான வரவேற்பைப் பெற்றது. அடுத்த பாகமான `கிரிஷ் 3' 2013ல் வெளியானத`கிரிஷ்' படத்தின் நான்காவது பாகத்தை நடிகர் ஹிரித்திக் ரோஷனே இயக்கி நடிப்பார், இதனை ஆதித்யா சோப்ரா மற்றும் நான் இணைந்து தயாரிக்க உள்ளோம் கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியானது. இந்தநிலையில், 'கிரிஷ் 4' தொடர்பாக அண்மையில் பல்வேறு யூகங்களும் வதந்திகளும் பரவி வந்தன. குறிப்பாக, படத்தின் பட்ஜெட் மற்றும் தயாரிப்பு தாமதம் குறித்து எழுந்த தகவல்களுக்கு தற்போது இயக்குநர் ராகேஷ் ரோஷன் விளக்கம் அளித்துள்ளார்.

'கிரிஷ் 4' படத்திற்காக உலகத் தரத்திலான விஎப்எக்ஸ் மற்றும் அதிரடி காட்சிகளை உருவாக்க ரூ.500 கோடி பட்ஜெட் வேண்டும் என்று ஹிருத்திக் ரோஷன் கோரியதாக வெளியான தகவல்களை ராகேஷ் ரோஷன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். மேலும், தயாரிப்பு தரப்பினரிடையே எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், "ஹிருத்திக் தனது இயக்குநர் அறிமுக படத்திற்காக ரூ.500 கோடி பட்ஜெட் கேட்டுள்ளார், ஆனால் யஷ் ராஜ் பிலிம்ஸ் ரூ.350 கோடிக்குள் செலவைக் கட்டுப்படுத்த விரும்புகிறது என்ற தகவல்கள் அனைத்தும் முற்றிலும் ஆதாரமற்றவை.

பரந்த ரசிகர்களை கவரும் நல்ல திரைப்படத்தை உருவாக்க காலம் தேவைப்படும். 'கிரிஷ்' தொடரின் ஒவ்வொரு படத்திற்கும் நானும் போதிய நேரம் எடுத்துள்ளேன்" என்றார்.படத்தின் தயாரிப்பு தாமதம் குறித்த கேள்விக்கும் பதிலளித்த ராகேஷ், ஹிருத்திக் ரோஷனின் தற்போதைய பணிகள் மற்றும் சமீபத்தில் தொடங்கப்பட்ட அவரது தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்ட காரணங்களால் படப்பணிகள் தாமதமாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். கிரிஷ் 4' திரைப்படத்தை 2027-ஆம் ஆண்டு வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் ராகேஷ் ரோஷன் முன்னதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com