திகில் கதையில் நடிக்க புதிய தோற்றத்துக்கு மாறிய லாரன்ஸ்

நடிகர் ராகவா லாரன்ஸ் திகில் கதையில் நடிக்க புதிய தோற்றத்துக்கு மாற்றிய புகைப்படத்தை வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
திகில் கதையில் நடிக்க புதிய தோற்றத்துக்கு மாறிய லாரன்ஸ்
Published on

நடிகர் ராகவா லாரன்ஸ் கடும் உடற்பயிற்சி மூலம் தனது உடலை கட்டுக்கோப்பான தோற்றத்துக்கு மாற்றிய புகைப்படத்தை வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அவர் தற்போது நடித்து வரும் திகில் படமான சந்திரமுகி 2-ம் பாகம் படத்துக்காக இப்படி தன்னை உருமாற்றி இருப்பதாக தெரிவித்து உள்ளார். இதனால் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே ருத்ரன் படத்தில் லாரன்ஸ் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. மேலும் லாரன்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''எனது தொண்டு நிறுவனத்துக்கு இத்தனை ஆண்டுகள் நன்கொடை வழங்கிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி. நன்கொடை மூலம் எனது சேவை பணிகளுக்கு ஆதரவு தந்தீர்கள். இப்போது நான் நல்ல இடத்தில் இருக்கிறேன். பல திரைப்படங்களிலும் ஒப்பந்தமாகி உள்ளேன். இனிமேல் மக்களுக்கு சேவை செய்யும் முழு பொறுப்பையும் நானே ஏற்க முடிவு செய்துள்ளேன். எனவே அறக்கட்டளைக்கு பணம் நன்கொடையாக வழங்க வேண்டாம். உங்கள் வாழ்த்துகள் போதும். நன்றி உள்ளவனாக இருப்பேன். ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வை விரைவில் ஏற்பாடு செய்கிறேன்" என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com