பாக்யஸ்ரீ போர்ஸின் ’லெனின்’... கவனம் ஈர்க்கும் டீசர்

"லெனின்" படம் ஜூன் 26-ம் தேதி திரைக்கு வர உள்ளது.
பாக்யஸ்ரீ போர்ஸின் ’லெனின்’... கவனம் ஈர்க்கும் டீசர்
Published on

சென்னை,

பிரபல தெலுங்கு நடிகர் அகில் அக்கினேனி. 'ஹலோ', 'மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர்' போன்ற படங்களில் ஸ்டைலிஷான நகரத்து இளைஞராகவும், 'ஏஜென்ட்' படத்தில் ஸ்பையாகவும் நடித்த இவர், இப்போது தன்னை முற்றிலும் மாற்றி கிராமத்து இளைஞராக களம் இறங்கியுள்ளார்.

Also Read
சுருதி ஹாசன் நடனத்தில் 'பெத்தி' பட பாடல் வெளியீடு
பாக்யஸ்ரீ போர்ஸின் ’லெனின்’... கவனம் ஈர்க்கும் டீசர்

அவர் தற்போது நடித்துள்ள “லெனின்” திரைப்படத்தில் ஒரு முரட்டுத்தனமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக பாக்யஸ்ரீ போர்ஸ் நடித்துள்ளார். நேற்று இப்படத்தின் டீசர் வெளியானது.

டீசரின் ஆரம்பம் மென்மையாக, நாயகி பாக்யஸ்ரீ போர்ஸ் மற்றும் அகில் இடையேயான காதலை காட்டுகிறது. ஆனால், நகர நகர அப்படியே ஆக்சன் மோடுக்கு மாறுகிறது. டீசரின் இறுதி நிமிடங்கள் அகிலின் மாஸ் அவதாரத்தைக் காட்டி படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

முரளி கிஷோர் அப்பூரு இயக்கி உள்ள இப்படத்தை அக்கினேனி நாகார்ஜுனா மற்றும் சூரியதேவரா நாக வம்சி இணைந்து தயாரித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார். அகில் அக்கினேனியின் 6-வது படமான "லெனின்", வரும் ஜூன் 26-ம் தேதி திரைக்கு வர உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com