இங்கிலாந்தில் டிக்கெட் விற்பனை தொடங்கிய 24 மணி நேரத்தில் சாதனை படைத்த 'லியோ'..!

'லியோ' படத்திற்கு இங்கிலாந்தில் டிக்கெட் விற்பனை தொடங்கிய 24 மணி நேரத்தில் 10 ஆயிரத்திற்கும் மேல் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
இங்கிலாந்தில் டிக்கெட் விற்பனை தொடங்கிய 24 மணி நேரத்தில் சாதனை படைத்த 'லியோ'..!
Published on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'லியோ' திரைப்படம் அக்டோபர் மாதம் 19-ந்தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இங்கிலாந்தில் லியோ திரைப்படம் அஹிம்சா என்டர்டெயின்மென்ட் மூலம், வெளியீட்டிற்கு முன்னதாகவே மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது.

லியோ திரைப்படம் உலகளவில் வெளியிடப்படுவதற்கு 42 நாட்களுக்கு முன்னதாக, டிக்கெட் விற்பனைக்கான முன்பதிவு நேற்று தொடங்கப்பட்டது. இந்த நிலையில் இங்கிலாந்தில் 24 மணி நேரத்தில் 10 ஆயிரத்திற்கும் மேல் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் முன்னதாக விநியோகம் செய்த 'வாரிசு' திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் முன்பதிவு ஆரம்பித்த முதல் 24 மணி நேரத்தில் சுமார் 2000 டிக்கெட்டுகளை விற்று சாதனை படைத்தது. இந்த நிலையில் 'லியோ' திரைப்படம் அதை விட பன்மடங்கு அதிகமாக 10 ஆயிரத்திற்கும் மேல் டிக்கெட்டுகள் விற்று சாதனை படைத்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com