பணிவால் வாழ்க்கை அழகாகும்... மாணவர்களுக்கு நயன்தாரா அறிவுரை

சென்னையில் கல்லூரி நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற நயன்தாரா மாணவர்களுக்கு அறிவுரை சொன்னார்.
பணிவால் வாழ்க்கை அழகாகும்... மாணவர்களுக்கு நயன்தாரா அறிவுரை
Published on

நயன்தாரா 'இறைவன்' படத்தில் ஜெயம் ரவி ஜோடியாகவும் 'ஜவான்' இந்தி படத்தில் ஷாருக்கானுடனும் நடித்து வருகிறார். இந்த நிலையில் சென்னையில் கல்லூரி நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று மாணவர்களுக்கு அறிவுரை சொன்னார்.

இதில் நயன்தாரா பேசும்போது, ''கல்லூரி வாழ்க்கை மிகவும் முக்கியமானது, மகிழ்ச்சி நிறைந்தது. இந்த காலத்தில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் உங்கள் எதிர்காலத்துக்கானது. இந்த சமயத்தில் நீங்கள் யாருடன் இருக்கிறீர்கள், யாருடன் பழகுகிறீர்கள் என்பது முக்கியமானது. இந்த நேரத்தில், நீங்கள் நல்ல நண்பர்களோடு பழக வேண்டும்.

நல்லவர்களை சேர்ந்து இருந்தீர்கள் என்றால் உங்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும். கெட்டவர்களோடு நீங்கள் சேர்ந்தால், வாழ்க்கை வேறு மாதிரி சென்று விடும். கல்லூரி நாட்களில் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் உங்கள் எதிர்காலத்திற்கானது. படிப்பை முடித்துவிட்டு வெளியே செல்லும் போது, சிறந்த நபராக திறமையானவராக இருக்க வேண்டும்.

எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும், பணிவாக இருக்க வேண்டும். மற்றவர்களிடம் நீங்கள் பணிவாக நடந்து கொள்ளும் போது, உங்கள் வாழ்க்கை இன்னும் அழகாக இருக்கும். உங்கள் பெற்றோருக்கும் நீங்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தினமும் அவர்களுக்காக 10 நிமிடத்தை செல்வழிக்க வேண்டும், அதில் அவர்களுக்கு கிடைக்கும் மகிழ்ச்சி உங்களுக்கு ஆசிர்வாதமாக மாறும்'' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com