"கூலி" டிரெய்லர் வெளியாவதால் டீசர் தேதியை மாற்றிய "எல்ஐகே" படக்குழு

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ படம் வரும் செப்டம்பர் 18ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
"கூலி" டிரெய்லர் வெளியாவதால் டீசர் தேதியை மாற்றிய "எல்ஐகே" படக்குழு
Published on

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' (எல்.ஐ.கே) என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில், எஸ்.ஜே. சூர்யா, கீர்த்தி ஷெட்டி, சீமான், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், ரவுடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் 18ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் டீசர் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி வெளியாகும் என்று படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது.

இந்நிலையில், 'எல்ஐகே' படக்குழு தனது எக்ஸ் பக்கத்தில், "தலைவர் தரிசனம் கூலி டிரெய்லர், இசை வெளியீட்டுக்குப் பிறகு 'எல்ஐகே' படத்தின் புதிய டீசர் தேதி அறிவிக்கப்படும்" என பதிவிட்டுள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில் திரைக்கு வர உள்ள 'கூலி' படத்தின் டிரெய்லர் வரும் ஆகஸ்ட் 2ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com