விஜய், சிவகார்த்திகேயன் மாதிரி எனக்கும்.. பிக்பாஸ் பிரபலம் திவாகர்

சினிமாவில் விஜய், சிவகார்த்திகேயனுக்கு அடுத்து தனக்குதான் அதிக ரசிகர்கள் இருப்பதாக கூறி அதிர்ச்சி அடைய வைத்து இருக்கிறார்.
விஜய், சிவகார்த்திகேயன் மாதிரி எனக்கும்.. பிக்பாஸ் பிரபலம் திவாகர்
Published on

சென்னை,

சமூக வலைத்தளங்களில் பிரபலமான கையோடு, பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்கும் வாய்ப்பு பெற்றவர் வாட்டர்லெமன் ஸ்டார் திவாகர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதால் உலகம் முழுவதும் பிரபலம் அடைந்துவிட்டதாக கூறி வரும் திவாகர், தமிழ் சினிமாவில் விஜய், சிவகார்த்திகேயனுக்கு அடுத்து தனக்குதான் அதிக ரசிகர்கள் இருப்பதாக கூறி அதிர்ச்சி அடைய வைத்து இருக்கிறார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பிக்பாஸ் பிரபலம் திவாகர் கூறியதாவது:

"நடிப்பு என்றால் சிவாஜிக்கு அடுத்தபடியாக கமல்ஹாசன். அதற்கடுத்து நான்தான். ஹீரோவாக அனைத்து திறமைகளும் இருக்கிறது. ஆனால் என்னை பார்த்து பயந்து, சூழ்ச்சிகள் செய்கிறார்கள். விஜய், சிவகார்த்திகேயனுக்கு இணையாக எனக்கும் ரசிகர்கள் உள்ளனர். மதுரையில் இருந்து கேப்டன் விஜயகாந்துக்கு அடுத்து எந்த ஒரு நடிகரும் பெரிதாக தமிழ் திரையுலகுக்கு வரவில்லை. அந்த இடத்தை நிரப்ப நான் வந்துள்ளேன். அவரை போல அடுத்த நடிகர் சங்க தலைவராகவும் ஆவேன்".

பல அவமானங்கள், கேலி கிண்டல்களை தாண்டி ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. எப்பொதும் பார்க்காத ஒரு கோணத்தில் ஒரு நடிப்பு அரக்கனை விரைவில் வெள்ளித்திரையில் நீங்கள் காண்பீர்கள். எனக்கு வரவிருக்கும் மனைவி திரிஷா, சமந்தா போல் இருந்தால் நன்றாக இருக்கும்” என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com