'லிப் டு லிப்' முத்தம் : நான் அந்த மாதிரி பொண்ணு கிடையாது - சம்யுக்தா ஹெக்டே

நடிகை சம்யுக்தா ஹெக்டே, தனது தோழிக்கு 'லிப் டு லிப்' முத்தம் கொடுத்தது சர்ச்சையாகி உள்ளது.
சென்னை,
'கோமாளி' படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமானவர், சம்யுக்தா ஹெக்டே. அதனைத்தொடர்ந்து 'பப்பி', 'தேள்', 'மன்மத லீலை' படங்களிலும் நடித்துள்ளார். தமிழ் தாண்டி கன்னடம், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ள சம்யுக்தா ஹெக்டே, அடிக்கடி ஏடாகூடமான கருத்துகளை தெரிவித்தோ அல்லது படங்களை வெளியிட்டோ சர்ச்சையில் சிக்குவது வாடிக்கை.
தனது நெருங்கிய தோழியின் திருமண நிகழ்வுக்கு சென்ற சம்யுக்தா ஹெக்டே, மணமேடையில் அவருக்கு உதட்டு முத்தம் கொடுத்து வாழ்த்தியது சர்ச்சையாகி இருக்கிறது. இதுதொடர்பான புகைப்படங்களும் வெளியாகி வைரலாகிறது.
இதையடுத்து, 'நீங்கள் பெண் ஈர்ப்பாளரா?' என்றெல்லாம் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதற்கு, 'இந்த முத்தத்துக்கு பின்னால் அதீத நட்பும், அன்பும் மட்டும் உள்ளது. என் உயிர் தோழி அவர். அதனால் தான் அன்பின் வெளிப்பாடாக முத்தம் தந்தேன். மற்றபடி, நான் அந்த மாதிரி பெண் என்று நினைக்காதீர்கள்'' என்று சிரித்தபடி பதில் அளித்துள்ளார்.






