இந்தி நடிகரை காதலிக்கிறேன் - நடிகை தமன்னா

இந்தி நடிகரை காதலிக்கிறேன் - நடிகை தமன்னா
Published on

தமன்னா தற்போது ரஜினிகாந்துடன் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து அரண்மனை 4-ம் பாகத்தில் நடிக்க உள்ளார். பிரபல இந்தி நடிகர் விஜய் வர்மாவை தமன்னா காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்தன. லஸ்ட் ஸ்டோரிஸ் 2 வெப் தொடரில் இணைந்து நடித்தபோது காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது.

இருவரும் கோவாவில் நடந்த புத்தாண்டு விருந்தில் முத்தமிட்டுக் கொண்ட வீடியோ இணைய தளத்தில் வைரலானது. மும்பையில் அடிக்கடி ஜோடியாக சுற்றும் புகைப்படங்களும் வெளியானது. இந்த நிலையில் விஜய்வர்மாவை காதலிப்பது உண்மை என்று தமன்னா உறுதிப்படுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "என்னுடன் நடிக்கும் ஒருவரை காதலிப்பேன் என்று நான் நினைக்கவே இல்லை. நிறைய நடிகர்கள் என்னோடு நடித்து இருக்கிறார்கள். ஒருவரிடம் காதல் ஏற்பட வேண்டும் என்றால் தனிப்பட்ட முறையில் அவரிடம் ஏதாவது சிறப்பு அம்சம் இருக்க வேண்டும்.

லஸ்ட் ஸ்டோரிஸ் 2 படப்பிடிப்பில்தான் விஜய்வர்மாவுடன் எனக்கு காதல் ஏற்பட்டது. நான் எதிர்பார்க்கும் ஒரு நபரைபோல் இருந்தார். அவருடனான உறவு இயல்பாகவே உருவானது. தனக்கான எல்லாவற்றையும் விட்டு விட்டு எனக்காக வந்தார். நான் எதுவும் செய்யாமலேயே எனது உலகத்தை புரிந்து கொண்டவர் எனக்கு கிடைத்துள்ளார். என் மீது ஆழ்ந்த அக்கறை வைத்து இருக்கிறார். அவர் எனது மகிழ்ச்சிக்கான இடம்'' என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com