கீர்த்தி ஷெட்டிக்கும் கோவைக்கும் இப்படியொரு கனெக்சனா? - ஷாக்கான ரசிகர்கள்

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம் நீண்ட நாட்களாக பல தடைகளை கடந்து இறுதியாக கடந்த 10ந் தேதி திரையரங்குகளில் வெளியானது.
கீர்த்தி ஷெட்டிக்கும் கோவைக்கும் இப்படியொரு கனெக்சனா? - ஷாக்கான ரசிகர்கள்
Published on

சென்னை,

தமிழ் மொழியை தனக்கு மிகவும் பிடிக்கும் என்று ’எல்ஐகே’ திரைப்பட விழாவில் நடிகை கீர்த்தி ஷெட்டி பேசியது கவனம் ஈர்த்துள்ளது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள புதிய படம் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி" (எல்.ஐ.கே). இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா, கீர்த்தி ஷெட்டி, சீமான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Also Read
’ஜனநாயகன்’ லீக் சர்ச்சை - தயாரிப்பு நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு
கீர்த்தி ஷெட்டிக்கும் கோவைக்கும் இப்படியொரு கனெக்சனா? - ஷாக்கான ரசிகர்கள்

நீண்ட நாட்களாக பல தடைகளை கடந்து இறுதியாக கடந்த 10ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. லவ், பேண்டஸி கதைக்களத்தில் வெளியான இந்த படம் இளசுகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்நிலையில், இப்பட விழாவில் பேசிய கீர்த்தி ஷெட்டி பல விசயங்களை பகிர்ந்துகொண்டார் அவர் பேசுகையில்,

"எனக்கு தமிழ் மொழி மிகவும் பிடிக்கும். என் அம்மா கோயம்புத்தூரில் படித்தவர், ஆனால் அவர் எனக்கு தமிழை கற்றுக் கொடுக்கவில்லை. தற்போது நான் இந்த அழகான மொழியை கற்றுக்கொண்டு மிகவும் ரசித்து வருகிறேன். டிரெய்லரை பார்த்த பிறகு, பலரும் என் கதாபாத்திரம் ரோபோ போல இருக்கிறது என்று நினைத்தனர். அதுவே இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றியாக நான் நினைக்கிறேன்.

விக்னேஷ் சிவன் சார் இந்த படத்தை உருவாக்கிய விதம் உண்மையிலேயே அற்புதமானது. 'தீமா' என்ற என் கதாபாத்திரத்திற்காக நான் நிறைய பாராட்டுகளை பெறுகிறேன்’ என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com