கிரிக்கெட் வீரருடன் காதலா? -நடிகை ராஷி கண்ணா

கிரிக்கெட் வீரருடன் காதலா என நடிகை ராஷி கண்ணா விளக்கம்.
கிரிக்கெட் வீரருடன் காதலா? -நடிகை ராஷி கண்ணா
Published on


கிரிக்கெட் வீரர்களை நடிகைகள் சிலர் ஏற்கனவே திருமணம் செய்துள்ளனர். பட்டோடியை ஷர்மிளா தாகூரும் அசாருதீனை சங்கீத பிஸ்லானியும், ஹர்பஜன் சிங்கை கீதா பஸ்ராவும் மணந்தனர். யுவராஜ் சிங்குக்கும் ஹஜீலுக்கும் திருமணம் நடந்தது. விராட் கோலியை நடிகை அனுஷ்கா சர்மா சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.

தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்து வீச்சாளர் பும்ராவும் நடிகை ராஷி கண்ணாவும் காதலிப்பதாக தெலுங்கு பட உலகில் தகவல் பரவி உள்ளது. ராஷி கண்ணா தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தமிழில் நயன்தாராவுடன் இமைக்கா நொடிகள் படத்தில் நடித்துள்ளார். அடங்க மறு என்ற படத்துக்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார்.

பும்ராவும் ராஷி கண்ணாவும் ரகசியமாக சந்தித்து காதலை வளர்ப்பதாக கிசுகிசுக்கள் பரவி உள்ளது. இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து ராஷி கண்ணாவிடம் கேட்டபோது மறுத்தார். பும்ராவும் நானும் காதலிப்பதாக ஆதராமில்லாமல் சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவி வருகிறது என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com