'கனிமா' டிரெண்டில் இணைந்த 'லப்பர் பந்து' பட நடிகை


Lubber Pandhu actress Swasika joins the Kanimaa trend
x
தினத்தந்தி 8 April 2025 6:29 AM IST (Updated: 8 April 2025 6:30 AM IST)
t-max-icont-min-icon

'ரெட்ரோ'படத்தின் 2-வது பாடலான 'கனிமா' சில நாள்களுக்கு முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது.

சென்னை,

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ரெட்ரோ'. பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படம் அடுத்த மாதம் 1 -ம் தேதி வெளியாக உள்ளது.

இதற்கிடையில், இப்படத்தின் 2-வது பாடலான 'கனிமா..' சில நாட்களுக்கு முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது. சமூகவலைதளங்களில் இந்தப் பாடலுக்கு பலரும் ரீல்ஸ் செய்து பதிவிட்டு வருகிறார்கள்.

இந்த டிரெண்டில் தற்போது லப்பர் பந்து பட நடிகை சுவாசிகாவும் இணைந்துள்ளார். தனது இன்ஸ்டா பக்கத்தில் 'கனிமா..'பாடலுக்கு நடமாடி வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

கடந்த 2009-ம் ஆண்டு வெளியான 'வைகை' படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் சுவாசிகா. அதனையடுத்து, 2012-ம் ஆண்டு வெளியான 'சாட்டை' படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு எந்த தமிழ் படத்திலும் நடிக்காத சுவாசிகா, சமீபத்தில் வெளியான 'லப்பர் பந்து' படத்தில் நடித்தார். தற்போது இவர் சூர்யாவின் 45-வது படத்தில் நடித்து வருகிறார்.

1 More update

Next Story