சினிமாவில் அதிர்ஷ்டம் முக்கியம் - நடிகை நிதி அகர்வால்

சினிமா துறையில் அதிர்ஷ்டம் மிகவும் முக்கியம் என்று நடிகை நிதி அகர்வால் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
சினிமாவில் அதிர்ஷ்டம் முக்கியம் - நடிகை நிதி அகர்வால்
Published on

தமிழில் 'ஈஸ்வரன், கலக தலைவன்' படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நிதி அகர்வால். தெலுங்கிலும் பிரபல நடிகையாக இருக்கிறார். சினிமா அனுபவங்கள் குறித்து நிதி அகர்வால் அளித்துள்ள பேட்டியில், ''நான் அதிர்ஷ்டத்தை நம்புகிறேன். அது இல்லை என்றால் யாருக்கும் எதுவும் அமையாது. நேர்மையாக சொல்ல வேண்டும் என்றால் சினிமா துறையில் அதிர்ஷ்டம் மிகவும் முக்கியம். உதாரணத்துக்கு சில கதைகளை பார்க்கும்போது அற்புதமாக இருக்கும். ஆனால் கடைசியாக படம் வேறு மாதிரி வந்துவிடும். பேப்பர் மீது சுமாராக இருப்பவை திரையில் பார்த்தால் பிரம்மாண்டமாக அமைந்து ஆச்சரியப்பட வைக்கும். இதற்குக் காரணம் 90 சதவீதம் அதிர்ஷ்டம் என்று நான் நம்புகிறேன். கதாபாத்திரங்களை பார்த்து பார்த்து தேர்ந்தெடுக்கும் நிலைக்கு நான் வந்து விட்டதாக நினைக்கவில்லை. ஆனால் வித்தியாசமான கதாபாத்திரங்களில் மட்டும் நடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். முக்கியமாக நடனம் தொடர்பான படத்தில் நடிக்க ஆசையாக உள்ளது. இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்தாலும் எந்த வித்தியாசமும் இல்லை. ஆனால் வியாபார ரீதியாக நிறைய வித்தியாசங்கள் இருக்கும்'' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com