சியான் விக்ரமின் அடுத்த படத்தை இயக்கும் மகிழ்திருமேனி

தற்போது மகிழ்திருமேனி நடிகர் அஜித்தின் 'விடாமுயற்சி' படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சியான் விக்ரமின் அடுத்த படத்தை இயக்கும் மகிழ்திருமேனி
Published on

சென்னை,

'சேதுபதி, சித்தா' படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் தனது 62 - வது படமான 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, துஷாரா விஜயன், சித்திக் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தை எச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

இப்படம் இரண்டு பாகங்களாக உருவாக உள்ளதை படக்குழு உறுதி செய்துள்ளது. தற்போது இப்படத்தின் இரண்டாவது பாகத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ளது. முதலில் இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. இப்படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு, முதல் பாகம் உருவாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது.

இதற்கிடையில் நடிகர் விக்ரம் அடுத்ததாக ஆக்சன் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை அஜித்தின் விடாமுயற்சி படத்தை இயக்கி வரும் மகிழ்திருமேனி இயக்க உள்ளார். இதற்காக மகிழ்திருமேனி நடிகர் விக்ரமிடம் கதை கூறியுள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com