“மகாஅவதார் நரசிம்மா” படத்தின் 2வது பாகத்தின் அப்டேட்

‘மகாஅவதார் நரசிம்மா’ திரைப்படத்தைத் தொடர்ந்து அடுத்த அவதாரத்திற்கான அறிவிப்பை ஹொம்பலே நிறுவனம் வெளியிட்டுள்ளது.
“மகாஅவதார் நரசிம்மா” படத்தின் 2வது பாகத்தின் அப்டேட்
Published on

கேஜிஎப், காந்தாரா உள்ளிட்ட படங்களை தயாரித்த கன்னடத்தில் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமான ஹொம்பாலே பிலிம்ஸ் குறைந்த செலவில் பிரமாண்ட படங்களை தயாரிப்பதில் தனித்துவம் பெற்றது. இந்தத் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள ‘மகாஅவதார் நரசிம்மா’ படம் இரண்ய கசிபு என்ற அரக்கன், அவனது மகன் பிரகலாதன், விஷ்ணுவை மையமாக வைத்து புராண திரைப்படமாக உருவாகியிருந்தது.

‘மகாஅவதார் நரசிம்மா’ அனிமேஷன் படத்தை அஸ்வின் குமார் இயக்கியிருந்தார். இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருந்தார். அனிமேஷனில் வரும் காட்சிகள் உலகத் தரத்தில் இருப்பதாக சினிமா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறி வருகிறார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கக்கூடிய படமாக வரவேற்பைப் பெற்றதுடன் ரூ. 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்து ஆச்சரியப்படுத்தியது. மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களை விவரிக்கும் வகையில் அடுத்தடுத்த படங்கள் வெளியாக உள்ளன.

இந்த நிலையில், 10 அவராதங்களில் இரண்டாவது அவதாரத்திற்கான அறிவிப்பு நாளை காலை 11.22 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இப்பாகத்திற்கும் சாம் சிஎஸ் இசையமைக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com