மகேஷ் பாபு நடிக்கும் படத்தின் காட்சிகள் லீக் - படக்குழு அதிர்ச்சி


Mahesh Babus film footage leaked - shock to the film crew
x

மகேஷ் பாபு தற்போது ராஜமவுலி இயக்கத்தில் "எஸ்எஸ்எம்பி 29" படத்தில் நடித்து வருகிறார்.

சென்னை,

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் மகேஷ் பாபு. இவர் தற்போது ராஜமவுலி இயக்கத்தில் "எஸ்எஸ்எம்பி 29" படத்தில் நடித்து வருகிறார்.

பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தில் மகேஷ் பாபுவுடன் இணைந்து பிரியங்கா சோப்ரா, பிரித்விராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது ஒடிசாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

எஸ்.எஸ்.எம்.பி 29 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் லீக் ஆகி வைரல் ஆகி வருகிறது. படத்தில் மகேஷ் பாபு நடிக்கும் காட்சிகள் இணையத்தில் லீக் ஆனதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது. இதனால் படக்குழுவினர் அப்செட் ஆகி இருப்பதாக கூறப்படுகிறது

1 More update

Next Story