இன்று வெளியாகும் 'கல்கி 2898 ஏடி' பட முக்கிய அப்டேட் - ரிலீஸ் தேதி அறிவிக்கப்படுமா?

'கல்கி 2898 ஏடி' படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியாக உள்ளது.
image courtecy:instagram@kalki2898ad
image courtecy:instagram@kalki2898ad
Published on

சென்னை,

நடிகர் பிரபாஸ், நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் 'கல்கி 2898 ஏ.டி.' படத்தில் நடிக்கிறார். தீபிகா படுகோன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், ராணா, துல்கர் சல்மான், திஷா பதானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

அதிக பொருட்செலவில் அறிவியல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகும் இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. படப்பிடிப்புகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், இன்று மாலை படத்தின் முக்கிய அப்டேட் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனையடுத்து இந்த அப்டேட்டில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படலாம் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக, படத்தில் வி.எப்.எக்ஸ் பணிகள் இன்னும் முடிக்கப்படாமல் இருப்பதால் படத்தை ஜூன் மாதம் 20-ம் தேதிக்கு தள்ளிவைப்பதாக தகவல் வெளியானது. சமீபத்தில், 'கல்கி 2989 ஏ.டி படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அமிதாப் பச்சனின் பாத்திரத்தை தெரிவித்தது.

View this post on Instagram

X

Daily Thanthi
www.dailythanthi.com