ரிஷப் ஷெட்டியின் “ஜெய் அனுமன்” படப்பிடிப்பில் இணைந்த மமிதா பைஜு

இயக்குனர் பிரசாந்த் வர்மா, ‘காந்தாரா’ புகழ் ரிஷப் ஷெட்டியை வைத்து ‘ஜெய் அனுமன்’ என்ற படத்தினை இயக்கிவருகிறார்.
ரிஷப் ஷெட்டியின் “ஜெய் அனுமன்” படப்பிடிப்பில் இணைந்த மமிதா பைஜு
Published on: 

மமிதா பைஜு, ‘ஜெய் அனுமன்’ படத்தின் மூலம் நேரடியாகத் தெலுங்கு திரையுலகில் காலடி எடுத்து வைத்துள்ளார்.

நடிகை மமிதா பைஜு

‘பிரேமலு’ திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை மமிதா பைஜு. அதனைத்தொடர்ந்து, தமிழில் இவர் நடித்த ‘டியூட்’ திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த வெற்றிகளுக்கு பிறகு தொடர்ந்து பல முன்னணி படங்களில் நடிக்க மமிதா பைஜுவிற்கு வாய்ப்புகள் குவியத் தொடங்கின. அவரது நடிப்பில் வெளியான ‘ஜனநாயகன்’, ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’, ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ ஆகிய திரைப்படங்கள் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளன. ஒரே ஆண்டில் மூன்று ரூ.100 கோடி வசூல் படங்களில் இடம்பெற்ற நடிகை என்ற ஹாட்ரிக் சாதனையை அவர் படைத்துள்ளார்.

‘ஜெய் அனுமன்’ படம்

இயக்குனர் பிரசாந்த் வர்மா, காந்தாரா புகழ் ரிஷப் ஷெட்டியை வைத்து ‘ஜெய் அனுமன்’ என்ற படத்தினை இயக்கிவருகிறார். பிரசாந்த் வர்மா இயக்கும் ‘ஜெய் அனுமன்’ படம், பிரசாந்த் வர்மா சினிமாட்டிக் யுனிவர்ஸ் கீழ் உருவாகும் ஒரு சூப்பர் ஹீரோ திரைப்படமாகும். இதற்கு எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் டி-சீரிஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன. விரைவில் மமிதா பைஜூவின் கதாபாத்திரம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தெலுங்கு திரையுலகில் மமிதா பைஜு

இந்நிலையில் தற்போது மமிதா பைஜு, ‘ஜெய் அனுமன்’ படத்தின் மூலம் நேரடியாகத் தெலுங்கு திரையுலகில் காலடி எடுத்து வைத்துள்ளார். ரிஷப் ஷெட்டி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தின் தற்போதைய படப்பிடிப்பில் அவர் இணைந்து விட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

X

Daily Thanthi
www.dailythanthi.com