தனுஷின் 55-வது படத்தில் வில்லனாக மம்முட்டி?

தனுஷின் 55வது படத்தில் தனுஷுக்கு வில்லனாக காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடிகர் மம்முட்டி நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனுஷின் 55-வது படத்தில் வில்லனாக மம்முட்டி?
Published on

சென்னை,

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் தனது 55-வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் கதாநாயகிகளாக சாய்பல்லவி, ஸ்ரீ லீலா ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் பிரபல மலையாள நடிகர் மம்முட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தில் பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இப்படத்தை தனுஷே தயாரிக்கவும் செய்வதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தனுஷ் 55-வது படத்தில் நடிக்க இருக்கும் நட்சத்திரங்களின் சம்பளம் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது. படத்தில் சாய் பல்லவிக்கு ரூ.12 கோடி சம்பளமும், மம்முட்டிக்கு ரூ.24 கோடி சம்பளமும், ஸ்ரீ லீலாவுக்கு ரூ.3 கோடி சம்பளமும் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஸ்ரீ லீலா வரும் காட்சிகள் குறைவு என்பதால் அவருக்கு இந்த சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இதில் நடிகர் மம்முட்டி காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் தனுஷுக்கு வில்லனாக நடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நீண்ட காலம் கழித்து மம்முட்டி தமிழ் படத்தில் நடிப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com