'தனுஷ் 55' படத்தில் மம்முட்டியின் போர்ஷன் நிறைவு

இந்த திரைப்படத்தில் மம்முட்டி காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
'தனுஷ் 55' படத்தில் மம்முட்டியின் போர்ஷன் நிறைவு
Published on

சென்னை,

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் தனது 55-வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் கதாநாயகிகளாக சாய்பல்லவி, ஸ்ரீ லீலா ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் பிரபல மலையாள நடிகர் மம்முட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்தப் படத்தில் பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த படத்தில் நடிகர் மம்முட்டி தொடர்பான காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் மம்முட்டி காவல் துறை அதிகாரியாகவும், கதையின் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் கதாபாத்திரத்திலும் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு தமிழ் திரைப்படத்தில் அவர் நடிப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், முழுப் படப்பிடிப்பும் இந்த ஆண்டின் இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com