“மனிதன் தெய்வமாகலாம்“ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தனுஷ்


“மனிதன் தெய்வமாகலாம்“ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தனுஷ்
x
தினத்தந்தி 7 Sept 2025 2:09 PM IST (Updated: 7 Sept 2025 2:11 PM IST)
t-max-icont-min-icon

டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் செல்வராகவன் நடிக்கும் ‘மனிதன் தெய்வமாகலாம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

விஒய்ஓஎம் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் புதிய திரைப்படத்தின் தலைப்பை இன்று நடிகர் தனுஷ் அவர்கள் சமூக ஊடகங்களில் வெளியிட்டார். நடிகர் செல்வராகவன் நடிக்கும் ‘மனிதன் தெய்வமாகலாம்’ படத்தை டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கவுள்ளார். இவர் ஏற்கெனவே, டிரிப், தூக்குத்துரை ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இயக்குநர் செல்வராகவன் தற்போது முழுநேர நடிகராக மாறியுள்ளார். .இந்தப் படத்தில் ஒய்ஜி மகேந்திரன், கௌசல்யா, கௌசி ரவி, மைம் கோபி ஆகியோர் நடித்துள்ளார்கள்.

இயற்கையும் அமைதியும் சூழ்ந்துள்ள ஒரு கிராமத்தில் நிகழும் பெரும் சோகம் அதன் ஒற்றுமையை சிதைக்கிறது. அதனைத் துடைத்தெறிய மக்கள் மனவலிமையில் போராடும் நாயகன், தனது கிராமத்தைக் காப்பாற்ற எடுக்கும் தீர்மானம், அவனை அங்கு தெய்வமாக உயர்த்துகிறது. இதுவே படத்திற்கான அற்புதமான தலைப்பை உருவாக்கியது.

இந்நிலையில், ‘மனிதன் தெய்வமாகலாம்’ படத்தின் போஸ்டரை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார். முதல்முறையாக தனுஷை நடிகராக அறிமுகப்படுத்திய இயக்குநர் செல்வராகவன்தான். தற்போது அவர் நடித்துள்ள இந்தப் பட போஸ்டரை வெளியிடும் அளவுக்கு தனுஷ் முன்னேறியுள்ளார்.

1 More update

Next Story